சென்னை: கஜா புயல் நிவாரணப் பணிகளில் தாமதம் குறித்து தகவல் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறியதாவது:
கஜா புயல் பாதிப்புக்களான மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 493 முகாம்களில் 2,49,083 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புயலால் இந்த அளவிற்கு சேதம் ஏற்படும் என கணிக்க இயலவில்லை. நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இரவும் பகலுமாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் மீட்புப் பணிகளுக்கு பொதுமக்களும் தகுந்த ஒத்துழைப்பு தரவேண்டும்.
நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளில் ஏதாவது தாமதம் என்றால் உடனே தகவல் அளியுங்கள். அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒரே சார்ஜிங்கில் 180 கி.மீ..! ரூ. 99,999-ல் ஓபன் ரோர் பைக்!

ஓய்விலிருந்து கிளாசனை வெளியே கொண்டு வாருங்கள்: கெவின் பீட்டர்சன்

தமிழக கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், தேர்வுக் குழுவினர் பதவிக்கு ஆட்கள் தேவை!
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


