திருவாரூர்: கஜா புயல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் இன்னும் முழுமையான நிவாரணம் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டதால் அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் அமைக்கப்பட்ட மாற்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கஜா புயல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய தாலுகாக்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் திருவாரூர், குடவாசல், வலங்கைமான், நன்னிலம், கொரடாச்சேரியில் பள்ளிகளில் முகாம்கள் இயங்கி வந்தால் நாளை பள்ளி விடுமுறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கிருஷ்ணா சுவாமிநாதன் நியமனம்!

நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்!

ஐடிஐ, டிப்ளமோ, சிஏ முடித்தவர்களுக்கு வேலை: எங்கு?

சபலென்கா, ஸ்வியாடெக், எலா வெற்றி
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

