பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

ஜெயலலிதா மரணம்: அப்பல்லோ மருத்துவர்கள் 8 பேருக்கு அழைப்பாணை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் 8 பேருக்கு விசாரணை ஆணையம் திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பி உள்ளது. 

Updated On :9 அக்டோபர் 2018, 1:49 am IST


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் 8 பேருக்கு விசாரணை ஆணையம் திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பி உள்ளது. 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான தனிநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 
இந்த ஆணையத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
அழைப்பாணை: இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களான விஜயசந்திர ரெட்டி, ராமகிருஷ்ணன் ஆகியோர் செவ்வாய்க்கிழமையும் (அக். 9), சத்தியமூர்த்தி, பாபு கே.ஆபிரகாம் ஆகியோர் புதன்கிழமையும் (அக். 10) ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. 
இதேபோன்று மருத்துவர்கள் மாத்யூ சாமுவேல், ரமேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் வியாழக்கிழமையும் (அக். 11), கார்த்திகேசன், ரேமண்ட் டோம்னிக் சேவியர் ஆகியோர் வெள்ளிக்கிழமையும் (அக். 12) ஆஜராகுமாறும் ஆணையம் திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.