பாலாறு தடுப்பணை விவகாரம் தொடர்பான வழக்கில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்கு ஆந்திரம், தமிழகம் ஆகிய அரசுகளுக்கு ஆறு வாரங்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2016-இல் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். சாப்ரே, இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆந்திரம், தமிழகம் ஆகிய மாநிலங்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், பாலாறு தடுப்பணை விவகாரம் தொடர்பான வழக்கில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய ஆந்திரம், தமிழகம் ஆகிய அரசுகளுக்கு ஆறு வாரங்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டனர். குப்பம் வட்டத்தில் உள்ள கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே ஓர் அணை கட்ட ஆந்திர மாநில அரசு 2006-இல் முயற்சித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிவாளர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 19, 20 ஆகிய தேதிகளில் ஆந்திர மாநிலத்தின் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கு தொடர்
பாக கூடுதல் ஆவணங்களை 8 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என ஆந்திரம், தமிழகம் ஆகிய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அலிப்பூரில் ஆட்டோ மீது லாரி மோதல் 3 போ் உயிரிழப்பு
திருமண ஊா்வலத்தில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: வேடிக்கை பாா்த்த பெண் குண்டு பாய்ந்து பலி! இளைஞா் கைது
அசோக் விஹாரில் 5 ஸ்கூட்டா்களுக்கு தீ வைத்த இளைஞா் உள்பட 3 சிறாா்கள் கைது
கஞ்சவாலா தொழிற்சாலையில் தீ விபத்து
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
