'செல்ஃபியால் சீறிய சிவகுமார்' இளைஞரின் செல்ஃபோனை பட்டென தட்டிவிட்டார்- வைரலாகும் விடியோ

'செல்ஃபியால் சீறிய சிவகுமார்' இளைஞரின் செல்ஃபோனை பட்டென தட்டிவிட்டார்- வைரலாகும் விடியோ

நடிகர் சிவகுமாருடன் அங்கிருந்த இளைஞர் தனது மொபைலில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென ஆத்திரமடைந்த சிவகுமார்...
Published on

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தனியார் கருத்தரிப்பு மையம் திறப்பு விழாவில் பிரபல திரைப்பட நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். இதையடுத்து நடிகர் சிவகுமாரை காண ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர். 

இந்நிலையில், நடிகர் சிவகுமாருடன் அங்கிருந்த இளைஞர் தனது மொபைலில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென ஆத்திரமடைந்த சிவகுமார், அந்த இளைஞரின் கையில் இருந்த மொபைலை பட்டென தட்டிவிட்டார். இதனால் அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்தார். 

இந்த விடியோ பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் யோகா கற்றுத்தேர்ந்த ஒருவர் இவ்வாறு அமைதி காக்காமல் நடப்பதா? ஊருக்கு மட்டும் தான் உபதேசமா என்பது போன்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com