வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தீபாவளியன்று தென் மாநிலங்களில் பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயித்தது உச்ச நீதிமன்றம்

தீபாவளியன்று தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :31 அக்டோபர் 2018, 11:11 am

DIN


சென்னை: தீபாவளியன்று தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதன்படி, காலை மற்றும் மாலையில் ஒரு மணி நேரம் வெடிக்கலாம் என்றும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பட்டாசு வெடிக்க நாடு முழுவதும் தடை கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீபாவளியன்று நாடு முழுவதும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியது.

இதனை திருத்தி, காலை வேளையில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்குமாறு தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2 மணி நேரத்துக்கு மேல் பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியாது என்று கூறியதுடன், தென் மாநிலங்களில் மட்டும் காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் பட்டாசு வெடித்துக் கொள்ளலாம் என்று கூறி, நேரத்தையும் நிர்ணயித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.