சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை கடைசி நாளாகும்.
சித்த மருத்தும், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய முறைப் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 14 -ஆம் தேதி தொடங்கியது. இந்தப் படிப்புகளுக்கு தமிழகத்தில் சென்னையில் 3 கல்லூரிகள், திருமங்கலம் (மதுரை), பாளையங்கோட்டை, கோட்டார் (நாகர்கோவில்) ஆகிய இடங்களில் தலா ஒரு கல்லூரி என மொத்தம் 6 அரசு கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது. இதுதவிரwww.tnhealth.org என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
3,000 விண்ணப்பங்கள்: 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இதுவரை விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இணையதளத்திலும் மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விண்ணப்பங்களைப் பெறுவதற்கு செப்டம்பர் 5-ஆம் தேதி (புதன்கிழமை) பிற்பகல் 3 மணி கடைசியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே தேதியில் (செப்.5) மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகர் அஜித் பிறந்த நாளில் ஓர் ஏமாற்றம்!

ரயில்வே துறையில் 30,000 பணியிடங்களை அழிக்கும் பாஜக! விழிப்புணர்வு பிரசாரத்தில் CPIM!

திமுக கொலை மிரட்டல்! ஆதவ் அர்ஜூனா வேண்டுகோள்! | VCK | Vijay

”முன்னேற்றத்திற்கான அரசு அமையும்!” பியூஷ் கோயல் பேட்டி NDA | ADMK
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


