பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கைவிடவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
"பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றதிலிருந்து பலமுறை பெட்ரோல், டீசல் விலைகளை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே வருகிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை பலமுறை குறைக்கப்பட்டும் இந்தியாவில் அதற்குரிய பலன் பொதுமக்களுக்கு கிடைக்காத விதத்தில் அரசு மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமே பயனடைந்து வருகின்றன. சுமார் 12 லட்சம் கோடி அளவிற்கு பொதுமக்கள் மீது விலை உயர்வு திணிக்கப்பட்டுள்ளது.
உலகின் எந்த நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் உள்ள அளவிற்கு ரூ.82-க்கும் அதிகமாகவும், டீசல் விலை ரூ.75-க்கும் அதிகமாகவும் விற்கப்படவில்லை. ரூபாய் 35-இல் இருந்து ரூபாய் 40-க்கு விற்கப்படவேண்டிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை இரண்டு மடங்கு அதிகமாக உயர்த்தி, நினைக்கும் பொழுதெல்லாம் எண்ணெய் நிறுவனங்கள் விலையை ஏற்றிக்கொண்டே வருகின்றன.
மத்திய அரசின் துணையோடும், ஒப்புதலோடும் இந்த விலையேற்றம் விரைவில் ரூபாய் 100-ஐ எட்டிவிடப்போகிறது. இத்தகு விலையேற்றத்தால், பொதுமக்கள் நேரிடையாகவும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மறைமுகமாகவும் பெரும் சுமையை ஏற்கவேண்டிய அவலநிலை தொடர்கதையாகி வருகிறது.
இந்த விலை உயர்வை மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கைவிடவேண்டும்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒரே சார்ஜிங்கில் 180 கி.மீ..! ரூ. 99,999-ல் ஓபன் ரோர் பைக்!

ஓய்விலிருந்து கிளாசனை வெளியே கொண்டு வாருங்கள்: கெவின் பீட்டர்சன்

தமிழக கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர், தேர்வுக் குழுவினர் பதவிக்கு ஆட்கள் தேவை!
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


