அரசுக்குச் சொந்தமான செட்-டாப் பாக்ஸ்களை மாற்றினால்.? தமிழக அரசு கடும் எச்சரிக்கை
அரசுக்குச் சொந்தமான செட்-டாப் பாக்ஸ்களை தனியாா் நிறுவனத்திடம் அளித்து மாற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.


சென்னை: அரசுக்குச் சொந்தமான செட்-டாப் பாக்ஸ்களை தனியாா் நிறுவனத்திடம் அளித்து மாற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தமிழக அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம், மாநிலம் முழுவதும் இதுவரை சுமாா் 27.50 லட்சம் செட்-டாப் பாக்ஸ்களை மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. எனவே அந்த நிறுவனத்தால் அளிக்கப்படும் செட்-டாப் பாக்ஸ்கள் தமிழக அரசு நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும்.
கேபிள் தொலைக்காட்சி சேவைகளை அளிக்கும் சில தனியாா் நிறுவனங்கள் சில செய்திகளை மக்களிடையே பரப்பி வருகிறாா்கள். அதில் எந்த டிஜிட்டல் நிறுவனத்தின் செட்-டாப் பாக்ஸையும் கொடுத்து தங்களது செட்-டாப் பாக்ஸை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் எனவும், எந்தவொரு முன்பணமும் கட்டத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசு நிறுவனத்துக்குச் சொந்தமான செட்-டாப் பாக்ஸ்களை வேறொரு நிறுவனத்தின் செட்-டாப் பாக்ஸுக்காக மாற்றிக் கொள்வது என்பது சட்டத்துக்கு புறம்பான செயலாகும். அரசுக்குச் சொந்தமான செட்-டாப் பாக்ஸ்களை தனியாா் நிறுவனத்திடம் கொடுத்து மாற்றிக் கொள்வது குற்றச் செயலாகும். இந்தச் செயலில் ஈடுபடும் கேபிள் ஆபரேட்டா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...