நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா (78) உடல் நலக் குறைவால் மேட்டுப்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியைச் சேர்ந்தவர் நடிகர் வெள்ளை சுப்பையா. இவரது மனைவி சாவித்திரி (60). மகள் தனலட்சுமி. சிறுவயது முதலே திரைப்படத் துறையின் மீது ஆர்வம் கொண்ட வெள்ளை சுப்பையா, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் மேட்டுப்பாளையம் சிவன்புரம் காலனியில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, செப்டம்பர் 1ஆம் தேதி வீட்டில் மயங்கி விழுந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் நான்கு நாள்கள் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு 8.40 மணி அளவில் அவர் உயிரிழந்தார். அவரது உடல் மேட்டுப்பாளையம் நகராட்சி, சாந்திவனம் மின் மயானத்தில் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் எரியூட்டப்பட்டது.
வெள்ளை சுப்பையா தமிழக அரசின் கலைச்செல்வன், தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சார்பில் 2016-17ஆம் ஆண்டுக்கான கலை முதுமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






