கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு: சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள அவ்வையார்குப்பத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் விருப்பம். அதுதான், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பமும், கொள்கையுமாக இருந்தது. இதற்காகவே, அப்போது சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. அதன் பிறகே, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தடை ஆணை பெற்றது.
இந்த விவகாரத்தில் சில உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதை முழுமையாக ஆராய்ந்து, அதுதொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என்றார் அமைச்சர் சி.வி.சண்முகம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.