பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

தலை சிறந்த தலைவர் கருணாநிதி: பிரணாப் முகர்ஜி புகழாரம்

தலை சிறந்த தலைவர் கருணாநிதி என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புகழாரம் சூட்டினார்.

சென்னை கோபாலபுரத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் அவரது படத்துக்கு வியாழக்கிழமை மலர் அஞ்சலி செலுத்திய  முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST


தலை சிறந்த தலைவர் கருணாநிதி என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புகழாரம் சூட்டினார்.
சென்னை வந்துள்ள பிரணாப் முகர்ஜி கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு வியாழக்கிழமை இரவு 8.40 மணியளவில் வந்தார். அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி ஆகியோர் வரவேற்றனர். அங்கு கருணாநிதியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கருணாநிதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க இயலவில்லை. சென்னைக்கு வர வாய்ப்பு கிடைக்கும்போது, கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்று, தலைசிறந்த தலைவரான அவருக்கு அஞ்சலி செலுத்த நினைத்தேன்.
எனது குடியரசுத் தலைவர் பதவிக் காலம் முடிந்த பிறகு, இப்போதுதான் முதல்முறையாக சென்னைக்கு வந்துள்ளேன். மு.க.ஸ்டாலின், கனிமொழியைச் சந்தித்துப் பேசியதில் மகிழ்ச்சி. 
1970-ஆம் ஆண்டு முதல் கருணாநிதியுடன் நட்பிலிருந்த காரணத்தினால், அவருக்கு எனது அஞ்சலியைச் செலுத்துவதற்காக மட்டுமே இல்லத்துக்கு வந்துள்ளேன். சுமார் 48 ஆண்டுகள் அவருடன் நட்புறவில் இருந்தேன். அந்தச் சமயங்களில் கருணாநிதியைச் சந்திப்பதற்காக அவரது இல்லத்துக்குப் பலமுறை வந்துள்ளேன் என்றார். தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் உடன் வந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.