கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

சென்னையில் இன்றும், நாளையும்: விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்; பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீஸார்

விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னையில் 2,500 சிலைகள் இந்து இயக்கங்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை விசர்ஜனம் செய்யப்படவுள்ளன.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:46 pm

தினமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னையில் 2,500 சிலைகள் இந்து இயக்கங்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை விசர்ஜனம் செய்யப்படவுள்ளன. இதற்காக 20 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
 விநாயகர் சதுர்த்தி வியாழக்கிழமை (செப்.13) கொண்டாடப்பட்டது.
 இதையொட்டி மாநகரில் பொதுஇடங்களில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 5 அடி முதல் 10 அடி உயரத்துக்கு சுமார் 2,500 சிலைகள் நகரில் வைக்கப்பட்டிருந்தன.
 இவை ஞாயிற்றுக்கிழமையும், திங்கள்கிழமையும் கடலில் கரைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இச்சிலைகள் கடலுக்குச் செல்லும் பாதைகளிலும், விநாயகர் சிலை ஊர்வலத்திலும் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர். பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் செல்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 விநாயகர் சிலை ஊர்வலம் அனுமதிப்பட்ட வழியிலேயே செல்ல வேண்டும்,
 ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் கரைக்கும் இடத்தை சென்றடைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை காவல் துறையினர் விதித்துள்ளனர்.
 இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக ஞாயிற்றுக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படவுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.கரைக்கப்படும் இடங்கள்: பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் சிலைகளை விசர்ஜனம் செய்வதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.