முன்மாதிரியாக மாறியிருக்கும் காயல்பட்டிணம் பெட்ரோல் பங்க்

தமிழகத்தின் பிற பெட்ரோல் நிலையங்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக காயல்பட்டிணம் பெட்ரோல் நிலையம் மாறியிருக்கிறது.
முன்மாதிரியாக மாறியிருக்கும் காயல்பட்டிணம் பெட்ரோல் பங்க்
Updated on
1 min read


தமிழகத்தின் பிற பெட்ரோல் நிலையங்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக காயல்பட்டிணம் பெட்ரோல் நிலையம் மாறியிருக்கிறது.

சிறார்கள் ஓட்டி வரும் வாகனங்களால் ஏராளமான விபத்துகள் நடப்பதையொட்டி, பெட்ரோல் நிலையத்துக்கு 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஓட்டி வரும் வாகனங்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பெட்ரோல் நிலையத்தின் வாயிலிலும் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை வாகனத்தை ஓட்டி வரும் நபரின் வயதில் எங்களுக்கு சந்தேகம் எழுந்தால், அவரது வாகன ஓட்டுநர் உரிமத்தை பரிசோதித்த பிறகே பெட்ரோல் நிரப்புகிறோம் என்கின்றனர் ஊழியர்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com