கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்  மீண்டும் சரிவு: விவசாயிகள் கவலை

முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால், அணையின்  நீர்மட்டம் மீண்டும் சரிந்து வருவதால், தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் சாகுபடிக்கு வாய்ப்பில்லை என

News image
Updated On :2 ஆகஸ்ட் 2019, 2:08 am

முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால், அணையின்  நீர்மட்டம் மீண்டும் சரிந்து வருவதால், தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் சாகுபடிக்கு வாய்ப்பில்லை என, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
      கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதும், முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் இருப்பை பொருத்து, வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரம் அணையிலிருந்து தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை உரிய காலத்தில் தொடங்கினாலும், இடுக்கி மாவட்டம் மற்றும் முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லை. 
      அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாததால், அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு குடிநீர்த் திட்டங்களுக்காக விநாடிக்கு 100 கன அடி மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு, அணையின் நீர்மட்டம் 112 அடியாக பராமரிக்கப்பட்டு வந்தது.
 இந்நிலையில், கடந்த ஜூலை 2-ஆம் தேதி முதல் முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு மற்றும் தேக்கடியில் லேசான மழை பெய்யத் தொடங்கியது.
      கடந்த ஜூலை 20-ஆம் தேதி, அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 945 கன அடியாக இருந்த நிலையில், அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 300 கன அடியாக உயர்த்தப்பட்டது.
பெரியாறு அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து, கடந்த ஜூலை 27-ஆம் தேதி 114.10 அடியாக இருந்தது. 
 அதையடுத்து, நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையின்றி அணைக்கு தண்ணீர் வரத்து குறையத் தொடங்கியது.  இதனால், நீர்மட்டம் வியாழக்கிழமை (ஆக.1) 113.75 அடியாகவும், அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 204 கன அடியாகவும் சரிந்திருந்தது.
     முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 120 அடிக்கும் மேல் இருந்தால் மட்டுமே, தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கும் வாய்ப்புள்ளது. 
 ஆனால், முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தற்போது மழையின்றி நீர்மட்டம் மீண்டும் சரியத் தொடங்கியுள்ளதால், இந்த ஆண்டு தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுடிக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.