பயங்கரவாதி தப்பிச் செல்வதாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு

தமிழகத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை அடுத்து  சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 
பயங்கரவாதி தப்பிச் செல்வதாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை அடுத்து  சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பாதுகாப்புப் பணியில் எவ்வித சமரசமும் செய்யக் கூடாது என ஆணையர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் கோயம்பேடு மார்க்கெட், புறநகர் பஸ் நிலையம், உயர்நீதிமன்ற வளாகம், விமான நிலையம் ஆகியவற்றில் பொதுமக்களை போலீஸார் சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். 

அதேபோல நகர் முழுவதும் போலீஸ் கண்காணிப்பும், ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவில் முக்கியமான சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் போலீஸார் தீவிர வாகனச் சோதனை செய்து வருகின்றனர். ஹோட்டல்கள், விடுதிகள், மேன்ஷன்கள் ஆகியவற்றில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். 

இதில் சந்தேகம்படும்படியாக தங்கியிருக்கும் நபர்களிடமும் போலீஸார் விசாரணை செய்கின்றனர்.  இந்தப் பாதுகாப்புப் பணியில் சுமார் 15 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் தப்பிச் செல்வதாக ஏற்பட்ட வதந்தியால் சனிக்கிழமை இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உளவுத்துறை போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com