சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

உள்ளாட்சி தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :14 டிசம்பர் 2019, 9:39 am

DIN

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில், வருகிற டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்தாலோசனை அந்தந்த திராவிட முன்னேற்ற மாவட்டக் கழகங்கள் சார்பில் நடைபெற்று வருகிறது.

தற்போது வரை,

*    திருவண்ணாமலை வடக்கு,
*    திருவண்ணாமலை தெற்கு,
*    திருச்சி வடக்கு,
*    திருச்சி தெற்கு,
*    கரூர்,
*    சேலம் மத்திய,
*    சேலம் மேற்கு,
*    கோவை தெற்கு,
*    நீலகிரி,
*    மதுரை வடக்கு,
*    மதுரை தெற்கு,
*    தூத்துக்குடி வடக்கு,
*    தூத்துக்குடி தெற்கு,
*    கன்னியாகுமரி கிழக்கு

ஆகிய கழக மாவட்டங்களில் கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து சுமூக முடிவெடுக்கப்பட்டு, தலைமைக் கழகத்தின் ஒப்புதலோடு, அந்தந்த மாவட்டக் கழகங்களின் சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மற்ற திராவிட முன்னேற்ற மாவட்டக் கழகங்கள் சார்பில் தோழமைக் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. விரைந்து அந்தந்த மாவட்டக் கழகங்கள் சார்பில் பட்டியல் வெளியிடப்படும் என்று கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.