சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக பறக்கும்படை அமைப்பு

உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 டிசம்பர் 2019, 12:16 pm

DIN


சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்சி அடிப்படையில் மற்றும் கட்சி அடிப்படை அல்லாமல் நடைபெறவுள்ள தேர்தல்களில், மக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிக்க உறுதி செய்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

மேலும், பதட்டம் நிறைந்த மற்றும் பிரச்னைக்குரிய வாக்குச்சாவடிகளை அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் கண்டறிந்து, அந்த வாக்குச்சாவடிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கவும், அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை விடியோ ஒளிப்பதிவு மற்றும் இணையதளம் மூலம் மாவட்ட மற்றும் மாநில அளவில் கண்காணித்து பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க மத்திய அரசு பணியாளர்கள் தேர்தல் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக இரண்டு அல்லது மூன்று ஊராட்சி ஒன்றியங்களுக்கு மூன்று பறக்கும்படை வீதம் முதன்மை பொறுப்பு அலுவலர் மற்றும் காவல்துறை அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட மாநில தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும்வரை, பறக்கும் படை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.