
ஆம்பூர் அருகே சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மின்விளக்கு இல்லாத இடத்தில் மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் வியாழக்கிழமை இரவு பிடித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பார்சனா பள்ளி பகுதியில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 7 அடி நீள மலைப்பாம்பு உள்ளதாக ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் பெருமாள் ஆகியோர் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் பாம்பை பிடித்தனர். அங்கு மின்விளக்கு இல்லாத போதிலும், டார்ச் லைட்டை பயன்படுத்தி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி ஏழு அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.