ரஜினிக்கு சொத்து தமிழர்கள் கொடுத்து, கமல் எதிர்ப்பு உள்நோக்கம் கொண்டது: கௌதமன்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கமல்ஹாசன் எதிர்ப்பது உள்நோக்கம் கொண்டது என இயக்குநர் கெளதமன் பேட்டியளித்தார். 
ரஜினிக்கு சொத்து தமிழர்கள் கொடுத்து, கமல் எதிர்ப்பு உள்நோக்கம் கொண்டது: கௌதமன்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கமல்ஹாசன் எதிர்ப்பது உள்நோக்கம் கொண்டது என இயக்குநர் கெளதமன் பேட்டியளித்தார். 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்குடியில் நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த இயக்குநர் கெளதமன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அதில் அவர் பேசியதாவது,

குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு நேர் எதிரானது. துப்பாக்கிச் சூடு சர்வாதிகார போக்கு கொண்டது. பல மதங்களைச் சார்ந்த மக்கள் வாழும் இந்திய இறையான்மைக்கு எதிரானது. இதன்மூலம் இந்தியாவில் ஒற்றுமையாக வாழும் மக்களை பிரிக்கப் பார்க்கிறார்கள். இந்தியாவில் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் வெடிக்கும். எனவே இந்தச் சட்டத்தை உடனடியாக முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்.

ஆட்சியைக் காப்பாற்ற இதை ஆதரிக்க வேண்டாம். அண்ணா பல்கலைகழத்தை இரண்டாகப் பிரிப்பதை தமிழக அரசு வேடிக்கை பார்க்க வேண்டாம். அதிகாரத்தை வைத்து எதிர்கட்சியினரை மிரட்டுவது தமிழர்களிடத்தில் வேண்டாம். மாணவர்கள் மீது கைவைத்தால் வரலாறு மாறும் என்று தெரிவித்தார்.

மேலும், தமிழர்களுக்கு ஆதரவாக ஒருமுறை கூட குரல் கொடுக்காதவர். எனவே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கமல்ஹாசன் எதிர்ப்பது உள்நோக்கம் கொண்டது. 

அதுபோன்று படத்தில் வன்முறை , போராட்டம் வேண்டும் என்றவர் தான் ரஜினிகாந்த், அவருக்கு உள்ள இன்றைய சொத்து தமிழர்கள் கொடுத்தது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com