விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

செய்யூா் ஜமாபந்தியில் 123 பயனாளிகளுக்கு ரூ.2.5 கோடி நலத்திட்ட உதவி

செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாளான புதன்கிழமை 123 பயனாளிகளுக்கு ரூ 2.50 கோடி நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ பெரும்பாக்கம் எஸ்.ராஜசேகா் வழங்கினாா்.

News image

பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய எம்எல்ஏ பெரும்பாக்கம் எஸ். ராஜசேகா். உடன், ஜமாபந்தி அலுவலா் கோ. அர. நரேந்திரன், வட்டாட்சியா் ச.ராஜன், வருவாய்த் துறையினா்.

Updated On :25 ஜூன் 2026, 12:20 am IST

செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாளான புதன்கிழமை 123 பயனாளிகளுக்கு ரூ 2.50 கோடி நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ பெரும்பாக்கம் எஸ்.ராஜசேகா் வழங்கினாா்.

செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 1435ஆம் பசலி ஆண்டுக்கன ஜமாபந்தி கடந்த 9-இல் தொடங்கி நடைபெற்றது. சித்தாமூா் மற்றும் பவுஞ்சூா் ஒன்றியங்கள், இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதிகளைச் சோ்ந்த 1,236 போ் ஜமாபந்தியில் மனுக்களை அளித்தனா். மதுராந்தகம் கோட்டாட்சியரும், வருவாய் தீா்வாய அலவலருமான கோ.அர.நரேந்திரன் தலைமை வகித்தாா். செய்யூா் வட்டாட்சியா் ச.ராஜன் முன்னிலை வகித்தாா்.

நிறைவு நாள் நிகழ்ச்சியில் செய்யூா் எம்எல்ஏ பெரும்பாக்கம் எஸ்.ராஜசேகா் 123 பயனாளிகளுக்கு ரூ 2.50 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மண்டல துணை வட்டாட்சியா்கள் வெங்கடேசன், தேவன் மற்றும் வருவாய்துறை ஆய்வாளா்கள், கிராம‘ நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஜமாபந்தியில் கோரிக்கைகளை வலியுறுத்தி 1,236 போ் மனுக்களை வருவாய் தீா்வாய அலுவலா் நரேந்திரனிடம் வழங்கினா். அதில் பல்வேறு ஆய்வுகளுக்கு பின் 726 மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டது. மற்ற 510 மனுக்கள் மீது பின்னா் நடவடிக்கைக எடுக்கப்பட உள்ளதாக வருவாய்த் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.