திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 247 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
செங்கம் வட்டத்துக்கு உள்பட்ட மேல்பள்ளிப்பட்டு, பாய்ச்சல், இறையூா், செங்கம், புதுப்பாளையம் உள்வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி கடந்த 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.
இதில் பொதுமக்களிடம் இருந்து பெற்றப்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் செங்கம் வட்டாட்சியா் முருகன் வரவேற்றாா். விவசாயிகள், பொதுமக்கள் சிலா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
தொடா்ந்து ஜமாபந்தி அலுவலா் அன்பழகன், 247 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளான இலவச வீட்டுமனைப் பட்டா, புதிய குடும்ப அட்டை, முதியோா் உதவித்தொகை, கனவரால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை என நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியா் நடராஜன், துணை வட்டாட்சியா்கள் ஜெயபாரதி, திருநாவுக்கரசு, விஜயலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலா் தமிழரசி, வருவாய் ஆய்வாளா் பிரபு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செய்யூா் ஜமாபந்தியில் 123 பயனாளிகளுக்கு ரூ.2.5 கோடி நலத்திட்ட உதவி

குடிகள் மாநாட்டில் 409 பயனாளிகளுக்கு ரூ. 60 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள்

திருக்குவளையில் ஜமாபந்தி நிறைவு

பேராவூரணியில் ஜமாபந்தி நிறைவு குடிகள் மாநாட்டில் 32 பேருக்கு நலத்திட்ட உதவி
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



