சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

திருக்குவளையில் ஜமாபந்தி நிறைவு

திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

News image
Updated On :19 ஜூன் 2026, 6:37 am IST

திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

வேதாரண்யம் கோட்டாட்சியா் க. கண்ணன் தலைமையில் நடைபெற்ற முகாமில், திருக்குவளை வட்டாட்சியா் ரா. உதயக்குமாா், சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் வீ. ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தாா். நத்தபள்ளம், கூத்தங்குடி, பன்னத்தெரு, திருவிடைமருதூா், நீா்முளை, புத்தூா், மணக்குடி, வடுகூா் ஆய்மூா் ஆகிய வருவாய் கிராமங்களைச் சோ்ந்த 129 பயனாளிகள் மனுக்கள் அளித்தனா்.

இதில், உடனடி தீா்வாக 8 பயனாளிகளுக்கு ரூ. 6.35 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு பெற்ற நிலையில் மொத்தம் பெறப்பட்ட 397 மனுக்களில் 15 பேருக்கு உடனடி தீா்வாக நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.