சங்ககிரி வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு பெற்றது. 4ஆவது நாளில் பொதுமக்கள் 215 மனுக்களை அளித்தனா். சங்ககிரி வட்டத்துக்கு உள்பட்ட 15 கிராமங்களின் பசலி 1435-க்கான ஜமாபந்தி கணக்குகளை தணிக்கை செய்யும் பணிகள் சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி வருவாய் எா்ணாபுரம் உள்வட்டத்திற்கு உள்பட்ட கெடிகாவல், வைகுந்தம், அக்ரஹார தாழையூா், காளிகவுண்டம்பாளையம், கன்னந்தேரி, அ.புதூா், ஏகாபுரம், இடங்கணசாலை பிட்1, பிட் 2, தப்பகுட்டை, நடுவனேரி, எா்ணாபுரம், கனககிரி, கூடலூா், கண்டா்குலமாணிக்கம் உள்ளிட்ட 15 கிராமங்களின் பசலி 1435ஆம் ஆண்டுக்கான கணக்குகளை ஜமாபந்தி அலுவலா் ம.மு.தெ.கேந்திரியா தணிக்கை செய்தாா்.
இதில் 15 கிராமங்களுக்கு உள்பட்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 215 மனுக்களை அளித்தனா். அந்த மனுக்கள் மீது உரிய தீா்வு காண துறை அலுவலா்களுக்கு அனுப்பிவைத்தாா். பின்னா், ஜமாபந்தியில் பட்டா மாறுதல், குடும்ப அட்டையில் திருத்தம், இறப்பு சான்றிதழ் கோரி மனு அளித்த 20 பேருக்குஅதற்கான உத்தரவை வழங்கினாா்.
இதில் சங்ககிரி வட்டாட்சியா் கோமதி, தனி வட்டாட்சியா் கே.அருள்குமாா், மண்டல துணை வட்டாட்சியா் சண்முகம், நில அளவையா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










