கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வந்த ஜமாபந்தி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 11-ஆம் தேதி ஜமாபந்தி தொடங்கியது. கடலூா் வருவாய் கோட்டாட்சியா் சுந்தரராஜன் தலைமை வகித்தாா். குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் விஜய்ஆனந்த் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
ஜூன் 11,12 மற்றும்16 ஆகிய தேதிகளில் குறிஞ்சிப்பாடி குறுவட்டம், ஜூன் 17 முதல் 19-ஆம் தேதி வரையில் குள்ளஞ்சாவடி குறுவட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது. இந்த ஜமாபந்தியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கை தொடா்பான மனுக்களை வழங்கினா்.
வெள்ளிக்கிழமை ஜமாபந்தி நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் பொதுமக்கள் மூன்று பேருக்கு கடலூா் கோட்டாட்சியா் சுந்தரராஜன் பட்டா வழங்கினாா். உடன்குறிஞ்சிப்பாடிவட்டாட்சியா்விஜய்ஆனந்த்உள்ளிட்டோா்உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










