தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அன்பும் அமைதியும் அனைவருக்கும் அமையட்டும்: ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

அன்பும் அமைதியும் மிக்க வாழ்வு அனைவருக்கும் அமையட்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

News image
stalin
Updated On :31 ஜனவரி 2024, 1:39 pm

DIN


சென்னை: அன்பும் அமைதியும் மிக்க வாழ்வு அனைவருக்கும் அமையட்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களால் உணர்வுடனும் உற்சாகப் பெருக்குடனும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருவிழா கருணை மிக்க தியாக வாழ்வைக் கொண்ட இயேசுநாதரின் பிறப்பினைக் குறிப்பதாகும். பிறருக்குத் துன்பம் ஏற்படுத்தாமல், பிறர் தவறுகளையும் தன் மீது சுமந்துகொண்ட பெருமகனாக இயேசுநாதரின் வாழ்க்கை அமைந்திருந்ததை வரலாற்றில் காண்கிறோம்.

அன்பும் அமைதியும் மிக்க வாழ்க்கை அனைவருக்கும் வாய்த்திட வேண்டும் என்பதே கிறிஸ்துமஸ் திருவிழாவின் நோக்கமாகும். அந்த நோக்கம் நிறைவேறிட, தி.மு.கழகம் என்றும் கிறிஸ்தவ சமுதாய மக்களுக்குத் துணை நிற்கும் என்ற உறுதியுடன் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.