
சென்னை: ஓசூர் தொகுதி காலி என்று அறிவிக்க கோரி ஆளுநர், சபாநாயகருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஓசூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி. கலவரம் ஒன்றில் பங்கேற்று பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில், சிறப்பு நீதிமன்றம் அவருக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கியது. இதையடுத்து அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது.
எனவே ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதி காலி என்று அறிவிக்கக் கோரி பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டது. ஆனால் இதுவரை சபாநாயகர் அதனை காலி என்று அறிவிக்கவில்லை.
இந்நிலையில் ஓசூர் தொகுதி காலி என்று அறிவிக்க கோரி ஆளுநர், சபாநாயகருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சபாநாயகர் தனபால் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் அரோரா ஆகியாருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஓசூர் தொகுதியை காலி என்று அறிவிக்க சபாநாயகர் தனபால் இதுவரை எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.