
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி வெள்ளியன்று மாலை பொறுப்பெற்றுக் கொண்டார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு, தலைவர் பொறுப்பில் கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என காங்கிரஸ் கட்சித் தலைமை கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.
அத்துடன் கட்சியின் செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத் மற்றும் மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளார்கள் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி வெள்ளியன்று மாலை பொறுப்பெற்றுக் கொண்டார்.
மாநில காங்கிரஸ் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவராக கே.எஸ்.அழகிரி வெள்ளி மாலை பதவியேற்றுக் கொண்டார். முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் அவரிடம் முறைப்படி பொறுப்பை ஒப்படைத்தார்.
இதேபோல், செயல் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்ட வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் அவருடன் சேர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத், திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், குஷ்பு உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.