ஒரு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் இறந்துவிட்டால், அங்கு இடைத்தேர்தல் நடத்தாமல் அந்தக் கட்சியின் சார்பில் மற்றொருவரை தேர்ந்தெடுக்கலாமே என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை கருத்து தெரிவித்துள்ளது.
திருவாரூர் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக, மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த தாமோதரன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்துள்ளார். அவரது மனு:
திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-இல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தலை ரத்து செய்வதாக இருந்தால் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்ற பிறகே ரத்து செய்ய வேண்டும். ஆனால் திருவாரூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட பிறகு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம். எனவே, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒரு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் இறந்துவிட்டால், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தாமல் அந்தக் கட்சியின் சார்பில் மற்றொருவரை தேர்ந்தெடுக்கலாமே என கருத்து தெரிவித்தனர்.
மேலும், இடைத்தேர்தல் நடத்துவதை தவிர்த்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவது தவிர்க்கப்படும். மக்களின் வரிப்பணம் வீணாவதை தவிர்க்கலாம். இடைத்தேர்தல் நடத்தாமல் ஏற்கெனவே வெற்றிபெற்ற கட்சியின் சார்பில் மற்றொருவரை தேர்ந்தெடுத்தால் முறைகேடுகளையும் தவிர்க்கலாம். மக்கள் குறிப்பிட்ட கட்சிக்கு தான் வாக்களிக்கிறார்கள். எனவே, அதே கட்சியைச் சேர்ந்த மற்றொருவரை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தொகுதிகளுக்கு இந்த கருத்து பொருந்தாது என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வரும் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் மே 23 வரை மழைக்கு வாய்ப்பு!

இந்த வாரம் கலாரசிகன் - 17-05-2026

சிஎஸ்கேவின் சாதனையை முறியடித்த ஆர்சிபி!

கலம் தொடா மகளிர்
விடியோக்கள்

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

