சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

தங்கம் ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை தொட வாய்ப்பு

உலகச்சந்தையில் தங்கத்தில் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் நாள்களில் தங்கத்தின் விலை மேலும் உயர

Updated On :15 ஜனவரி 2019, 1:38 am IST

உலகச்சந்தையில் தங்கத்தில் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் நாள்களில் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த மாத இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.25 ஆயிரத்தை தொட வாய்ப்பு உள்ளது என்று, சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 
தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக படிப்படியாக உயர்ந்து வந்தது. தங்கத்தின் விலை கடந்த 10-ஆம் தேதி பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.24,608-யை தொட்டது. இதன்பிறகு சற்று விலை குறைந்திருந்தது. இந்நிலையில், தங்கத்தின் விலை திங்கள்கிழமை (ஜன.14) மீண்டும் உயர்ந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.96 உயர்ந்து, ரூ.24,704-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுப நிகழ்ச்சிக்கு தங்க நகைகள் வாங்கும் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விலை உயர்வுக்கு காரணம் என்ன என்பது குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சல்லானி கூறியது: உலக பொருளாதாரத்தில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் வர்த்தகம் சார்ந்த பங்குச்சந்தையில் முதலீடுசெய்யாமல், தங்கத்தில் முதலீடு செய்துவருகின்றனர். 
அதேபோல, சமீபகாலமாக, அமெரிக்க அதிபர் சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இது, தொழில்துறையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, மற்ற நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அவர் பேசி வருகிறார். இந்த காரணங்களால்,உலக சந்தையில் தங்கத்தில் முதலீடு உயர்ந்து வருகிறது.இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதன்காரணமாக, உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. 
அமெரிக்காவில் கடந்த வாரம் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்துக்கான குறியீடு சரிந்துள்ளது.அதனால், பெருமளவு முதலீடு தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால், தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இனி வரும் நாள்களில் தொடர்ந்து விலை உயரும். குறிப்பாக, இந்த மாத இறுதிக்குள் தங்கம் ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை தொட வாய்ப்பு உள்ளது என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.