தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விராலிமலை ஜல்லிக்கட்டு: 2 ஆயிரம் காளைகள் பங்கேற்கும் சாதனை நிகழ்வு!

விராலிமலையில் 2 ஆயிரம் காளைகள் பங்கேற்கும் கின்னஸ் சாதனை முயற்சி ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:55 am

DIN

விராலிமலையில் 2 ஆயிரம் காளைகள் பங்கேற்கும் கின்னஸ் சாதனை முயற்சி ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உலக சாதனை முயற்சியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனனர். காலை 8 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த ஜல்லிக்கட்டில் முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 

2 ஆயிரம் காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கவுள்ளன. வெற்றி பெறுவோருக்கு சிறப்புப் பரிசுகளாக கார்கள், மோட்டார் சைக்கிள்கள், மிதிவண்டிகள், தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள், பீரோ, கட்டில், கிரைண்டர், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருள்களும் வழங்கப்படவுள்ளன.

இதுவரை நடைபெற்ற ஜல்லிக்கட்டை விடவும் அதிக எண்ணிக்கையில் காளைகளும், மாடுபிடி வீரர்களும், பரிசுகளும் வழங்கப்படவுள்ளதால் உலக சாதனைப் பட்டியலில் இதனைச் சேர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக லண்டனில் இருந்து இருவர் பார்வையாளர்களாகப் பங்கேற்றுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 518 வாடிவாசல்கள் உள்ளதாகவும், வேறெந்த மாவட்டத்திலும் இதுபோன்ற ஜல்லிக்கட்டு விழாவுக்கான வாடிவாசல்கள் இந்த எண்ணிக்கையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.