அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது: போராட்டம் குறித்து கமல்

அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது: போராட்டம் குறித்து கமல்

அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது என்று நடைபெற்று வரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் போராட்டம் குறித்து கமல் கருத்து தெரிவித்துள்ளார்.
Published on

சென்னை: அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது என்று நடைபெற்று வரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் போராட்டம் குறித்து கமல் கருத்து தெரிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ  ஜியோ அமைப்பினர் கடந்த 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

கல்வியாளர்களை காப்பது அரசின் கடமை. கல்வியை காப்பது கல்வியாளர்களின் கடமை. அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது. தேர்வு நெருங்கும் வேளையில் நாளைய நம்பிக்கையாம் மாணவர்களின் கல்வியை காப்பது நமது கடமை.

பேச்சு வார்த்தைகள் உரிமைக்காய் தொடருட்டும். கல்விச்சாலைகள் கடமைக்காய் திறக்கட்டும். எட்டு கோடித்தமிழர்களின் உணர்வுகளின் சார்பாய் இதுவே என் குரல்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com