தனியார் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் தேசியக் கல்விக் கொள்கை சொல்வது என்ன?

தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவு பற்றி சமூக செயற்பாட்டாளரும், குழந்தைகளுக்கான எழுத்தாளருமான உமாநாத் விழியனின் எளிமையான விளக்கங்கள்.
தனியார் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் தேசியக் கல்விக் கொள்கை சொல்வது என்ன?

தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவு பற்றி சமூக செயற்பாட்டாளரும், குழந்தைகளுக்கான எழுத்தாளருமான உமாநாத் விழியனின் எளிமையான விளக்கங்கள்.

தேசியக் கல்விக் கொள்கை வரைவை நாம் ஏன் புரிந்து கொள்ள வேண்டும் என்பது முதல் அதில் எத்தனை ஓட்டைகள் இருக்கிறது என்பது வரை சிறு சிறு கேள்வி பதில் வடிவில் பதிவிட்டு வருகிறார்.

அதில் இருந்து சில..
கேள்வி : தேசிய கல்விக் கொள்கையில் தனியார் பள்ளிகளை ரெகுலேட் செய்ய ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றது தானே?

பதில் : அவை ரெகுலேட் செய்வது போல தோன்றினாலும் அப்படி இல்லை. எப்போது ஒரு விஷயத்தினை கண்காணிக்க முடியும் இதெல்லாம் அவசியமாக இருக்கவேண்டும் அவை இல்லை என்றால் நடவடிக்கை எடுப்பதே கண்காணிப்பு. எதுவுமே கட்டாயம் என்று இல்லை, அவரவர் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். நகரங்களில் பெரிய அறைகள் தேவையில்லை, மைதானங்கள் தேவையில்லை, குறுகிய மாடிப்படிகள் இருக்கலாம்.

இனியன் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

”பள்ளிகள் குழந்தைகள் மீது செலுத்தும் மிகப்பெரிய வன்முறை மைதானங்கள் இல்லாமல் பள்ளிகளை கட்டமைத்தல்"

ஆமாம், இது வன்முறையை எளிதாக பள்ளிக்குள் நுழைய வகுத்துவிடும். சில ஆண்டுகள் முன்னர் கும்பகோணம் தீ விபத்தும் உங்கள் நினைவிற்கு வரலாம். அடுத்த வரியே அவர்கள் பாதுகாப்பிற்கும், கற்றலுக்கு இனிமையான சூழலும் இருப்பதில் எவ்வித சமரசமும் இல்லை என்கின்றார்கள்.

- விழியன்

தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவு மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கும் கிடுக்கிப்பிடியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விழியன் விளக்கியிருப்பதாவது,

உயர்கல்வி நிறுவனங்களில் இனி ஆசிரியர்கள் / ஊழியர்கள் சேர்க்கை மிகவும் கடுமையாக இருக்கும். அவர்கள் நிரந்தர ஆசிரியர் / ஊழியராக மாறுவதற்கு குறைந்தது ஐந்து வருடங்களாகும். அதுவும் நிர்வாகம், சக ஊழியர்கள், மாணவர்களின் கருத்தினை கேட்டுவிட்டே இதனை நிர்வாகம் மேற்கொள்ளும். இது அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இது தொடர்பாக மற்றொரு கேள்வி பதில் விளக்கம்.. பிரத்யேகமாக

கேள்வி: தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏதேனும் தேர்வு இருக்கின்றதா?

பதில் : தனியார் ஆசிரியர்கள் அனைவரும் இனி மாநில அல்லது தேசிய அளவிலான TET தேர்வுகளையும் NTA நடத்தும் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அது அடுத்த ஆண்டு முதலே அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்கள் இந்த தேர்வினை எடுக்க வேண்டுமா இல்லையா என்ற குறிப்பு இதில் இல்லை.

எழுத்து தேர்வு இல்லாமல் வகுப்பறையில் எப்படி பாடம் எடுக்கின்றார்கள் என்ற தேர்வு நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com