கஜா புயல் நிவாரண கணக்கெடுப்பு பணிகளில் குளறுபடி: ஆதாரத்துடன் ஸ்டாலின் பேச்சு 

கஜா புயல் நிவாரண கணக்கெடுப்பு பணிகளில் குளறுபடி: ஆதாரத்துடன் ஸ்டாலின் பேச்சு 

கஜா புயல் நிவாரண கணக்கெடுப்பு பணிகளில் குளறுபடி இருப்பதாக ஆதாரத்துடன் சட்டப்பேரவையில் வியாழன்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை: கஜா புயல் நிவாரண கணக்கெடுப்பு பணிகளில் குளறுபடி இருப்பதாக ஆதாரத்துடன் சட்டப்பேரவையில் வியாழன்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

கஜா புயல் நிவாரணப் பணிக்கான கணக்கெடுப்பில் எரிசக்தி துறையின் சார்பில் பல பணிகளை இங்கு செய்திருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றீர்கள். நான் அதையொட்டி கேட்க விரும்புவது, கஜா புயல் நிவாரணப் பணி கணக்கெடுப்பில் மிகப்பெரிய குளறுபடி இருப்பதற்கு, உதாரணமாக ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்லுவார்கள், அதுபோன்று மின் துறையின் கணக்கை மட்டும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். முதலமைச்சர் அவர்கள், 19-11-2018 அன்று வெளியிட்டிருக்கக்கூடிய செய்திக்குறிப்பில் 86,702 மின்கம்பங்கள், 347 மின்மாற்றிகள் மற்றும் 201 துணை மின் நிலையங்கள் சேதமடைந்திருக்கின்றது என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

ஆனால், உங்கள் துறையின் மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக்குறிப்பில் பக்கம் 08-ல் என்ன சொல்லியிருக்கின்றீர்கள் என்றால், 3,31,772 மின்கம்பங்களும் 1,655 மின்மாற்றிகளும் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, கிட்டத்தட்ட 2 இலட்சம் வித்தியாசம் வருகின்றது. எனவே, இந்தக் கணக்கெடுப்பில் இவ்வளவு பெரிய வித்தியாசம் எப்படி வந்தது. கஜா புயல் கணக்கெடுப்பு முழுமையாக - உண்மையாக நடைபெற்றிருக்கின்றதா, பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உரிய நிவாரணம் போய் சேர்ந்திருக்கின்றதா. எனவே, இந்த கணக்கெடுப்பு பற்றி அமைச்சர் அவர்கள் விளக்கி சொன்னால் சிறப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com