இந்த நிலையில், நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை (20.06.19) ஆஜரான வழக்குரைஞர் ஏ.பி.சூர்யபிரகாசம், நீட் விவகாரத்தில் உயர்மன்ற உத்தரவை தமிழக அரசு முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், இந்த ஆண்டு நீட் தேர்வு தோல்வியின் காரணமாக, திருப்பூரைச் சேர்ந்த ரீத்துஸ்ரீ, விழுப்புரத்தைச் சேர்ந்த மோனிஷா, தஞ்சாவூரைச் சேர்ந்த வைஷ்யா ஆகிய மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். தமிழக அரசு உரிய பயிறசி வழங்கியிருந்தால், இந்த தற்கொலைகளைத் தடுத்திருக்கலாம். எனவே இதற்கு தமிழக அரசே காரணம். மேலும் பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.