வரும் 2031 - 2041ம் ஆண்டு காலத்தில் தமிழகத்தின் மக்கள் தொகை வளர்ச்சி என்பது சரிவு நிலையில் செல்லும் என்று மத்திய அரசு தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும் ஏனோ தானோ வென்று சொல்லப்படவில்லை. தமிழகத்தின் மக்கள் தொகை சரிவு என்பது 0.05% ஆக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம், இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் இருக்கும் மொத்த மக்கள் தொகையில் மூத்த குடிமக்களின் அதாவது 60 வயதுக்கு மேலானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமாம்.
அதாவது, 2041ம் ஆண்டில் தென்மாநிலங்களில் 20 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்குக்கும் குறைவாக இருக்கும், ஆனால் அதே சமயம் 59 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தில் ஒரு பங்காக அல்லது அதற்கு மேலும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கெல்லாம் காரணமாக சொல்லப்பட்டிருக்கும் விஷயம்தான் சற்று அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. அதாவது சமீபத்திய பத்து ஆண்டுகளில் மொத்த கருத்தரித்தல் விகிதம் என்பது வேகமாகக் குறைந்து வருவதும், 2021ம் ஆண்டுகளில் மரணத்தை விட, குழந்தை பிறப்பு குறைந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


