ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு சோளம் இறக்குமதியில் வரிவிலக்கு: மோடிக்கு முதல்வர் கடிதம்

கோழிப்பண்ணை உரிமையாளர்கள் வரியின்றி சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

News image
Updated On :15 ஜூலை 2019, 12:42 pm

DIN


சென்னை: கோழிப்பண்ணை உரிமையாளர்கள் வரியின்றி சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அமெரிக்க படைப்புழு தாக்குதலால் நாடு முழுவதும் சோளத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்,  சோளத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கோழி தீவனத்தில் 47% சோளம்தான் உள்ளது. தமிழகத்தில் கோழிப் பண்ணையில் சோளத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தீர்க்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, சோளத்தின் விலை உயர்வால் கோழிப் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோழிப் பண்ணையாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டு சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.