விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கமர்கட் தந்து காது கம்மலை திருடிய திமுக ஊழல் விஞ்ஞானிகள்: தமிழிசை 

பொய்வாக்குறுதி எனும் கமர்கட் தந்து காது கம்மலை திருடிய திமுக.ஊழல் விஞ்ஞானிகள் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

News image
Updated On :15 ஜூலை 2019, 12:21 pm

DIN

சென்னை: பொய்வாக்குறுதி எனும் கமர்கட் தந்து காது கம்மலை திருடிய திமுக.ஊழல் விஞ்ஞானிகள் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக திமுக-காங் கூட்டணி எம்பிகளின் செயல்பாடுகள் குறித்து பெருமிதம் எனும் ஸ்டாலின் அவர்களே அவைக்குறிப்பில் ஏறாத கோஷங்கள், கோரிக்கை மனு அளிப்பு, வேஷங்கள் இல்லாத இந்தி திணிப்பு எதிர்ப்பு நாடகங்கள், வந்துவிட்ட நீட் தேர்வுக்கு வீண் எதிர்ப்பும் வரமறுத்த காவிரி நீரை கோர மறந்த கூட்டணி தர்மம்!

ஏற்கனவே இருந்த ரயில் ஊழியர் மொழி பயன்பாட்டு அரசாணைகளை உடனே அமுலாக்கிய மைய அரசின் வேகத்தை எம்பிக்கள் சாதனை எனவீண் ஜம்பம்.பொய்வாக்குறுதி எனும் கமர்கட் தந்து காது கம்மலை திருடிய திமுக.ஊழல்விஞ்ஞானிகளின் காதறுந்த ஊசிகள் அங்கே.வீண்ஜம்பம் இங்கே?இனி தமிழகம் ஏமாறப்போவதில்லை தாமரைமலர்ந்தேதீரும்

எதுவும் செய்ய இயலாதவர்கள் விமர்சிக்கிறார்கள் என்கிறார் ஸ்டாலின்... ஆம்.பொய் வாக்குறுதி தர இயலாதவர்கள்... ஓட்டுக்கு பணம் தர இயலாதவர்கள்... ஊழல் செய்ய இயலாதவர்கள்... வாரிசு அரசியல்,குடும்ப அரசியல் செய்ய இயலாதவர்கள்... கருப்பு பணம் பதுக்கி பணம் சேர்த்து அரசியல் வியாபாரம் செய்ய இயலாதவர்கள்... தமிழ் மொழியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்த இயலாதவர்கள்... ஆனாலும் விமர்சிக்கும் உரிமை எங்களுக்கு உண்டு.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.