

சென்னை: கோழிப்பண்ணை உரிமையாளர்கள் வரியின்றி சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அமெரிக்க படைப்புழு தாக்குதலால் நாடு முழுவதும் சோளத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சோளத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கோழி தீவனத்தில் 47% சோளம்தான் உள்ளது. தமிழகத்தில் கோழிப் பண்ணையில் சோளத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தீர்க்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, சோளத்தின் விலை உயர்வால் கோழிப் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோழிப் பண்ணையாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டு சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.