
சென்னை: “வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை” என்று 130கோடி இந்தியர் உதடுகள் முணுமுணுப்பதாக சந்திராயன் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நிலவு குறித்து ஆராய்ச்சி செய்ய இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகலில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் “வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை” என்று 130கோடி இந்தியர் உதடுகள் முணுமுணுப்பதாக சந்திராயன் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
130கோடி இந்தியர் உதடுகள் முணுமுணுக்கின்றன.
“வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை”.
இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்தி
இந்தியா எழுந்து நின்று கைதட்டுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.