இந்நிலையில், கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, சில சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து தங்களின் கருத்துக்களையும் கேட்கவேண்டும் என்று அங்கிருந்த ஆசிரியர்களை, அதிகாரிகளை மிரட்டியுள்ளது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த கும்பல் 'தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்' என்று தங்களை அடையாளப்படுத்தி கொண்டதாக தெரிகிறது. ஒரு கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகளில் தலையிடுவது சட்டவிரோதம் என்பதை அவர்கள் உணர வேண்டும். தொடர்ந்து கல்வி நிலையங்களில் புகுந்து இது போன்ற வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவது தான் ஈ வெ ரா கற்று தந்த பகுத்தறிவா என்பதை 'திராவிட அடைமொழி கொண்ட இயக்கங்கள் விளக்க வேண்டும்.