திருநெல்வேலியில் திமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் உள்பட 3 பேர் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாமல் இருந்தது காவல்துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, உமா மகேஸ்வரி உட்பட 3 பேரின் உடல்களும் நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் முருகசங்கரன் (72). இவர் நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி உமா மகேஸ்வரி (65) திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர். இவர், 1996 முதல் 2001-ஆம் ஆண்டு வரை திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் மேயராகப் பணியாற்றினார்.
இருவரும் திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரி அருகே ரெட்டியார்பட்டி-மேலப்பாளையம் பிரதான சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் வீட்டில் மேலப்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்த மாரி (30) பணிப்பெண்ணாக இருந்து வந்தார்.
உமா மகேஸ்வரியின் மகள் கார்த்திகாவின் கணவர் லால்பகதூர் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் உமா மகேஸ்வரி வீட்டுக்குச் சென்றபோது வீட்டில் உமாமகேஸ்வரி, முருகசங்கரன், மாரி ஆகியோர் ரத்தக் காயங்களுடன் கிடப்பதை பார்த்தார். தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, மூவரும் தனித்தனி அறைகளில் கத்திக்குத்து, இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தைக் கண்டனர். மூவரின் சடலங்களும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
3 தனிப்படைகள்: மாநகர காவல் ஆணையர் பாஸ்கர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்திய பின்பு செய்தியாளர்களிடம் கூறியது:
கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கத்திக்குத்து காயம் உள்ளது. உமா மகேஸ்வரி அணிந்திருந்த தங்கச் சங்கிலி, வளையல், கம்மல் ஆகியவை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. வீட்டில் இருந்த பீரோக்களும் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்களும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. சுமார் 3 பேர் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும், ஆதாயத்துக்காக நிகழ்த்தப்பட்டிருக்கலாம் எனவும் முதல்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களைப் பிடிக்க ஒரு காவல் உதவி ஆணையர் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொலை நிகழ்ந்துள்ள வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இருப்பினும், இப்பகுதியில் வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...





