மத்திய தணிக்கைக் குழு அறிக்கைக்கு தமிழ்நாடு அரசின் பதில் என்ன?: இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி 

மத்திய தணிக்கைக் குழு அறிக்கைக்கு தமிழ்நாடு அரசின் பதில் என்ன? என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய தணிக்கைக் குழு அறிக்கைக்கு தமிழ்நாடு அரசின் பதில் என்ன?: இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி 

சென்னை: மத்திய தணிக்கைக் குழு அறிக்கைக்கு தமிழ்நாடு அரசின் பதில் என்ன? என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன்   அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு திங்களன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு அரசின் சார்பில் வளர்ச்சி திட்டப் பணிகள் அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகின்றது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட திட்டங்களும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் பயன்படுத்தவில்லை என்று மத்திய தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக 2017-18-ம் நிதி ஆண்டில் 2.36 லட்சம் கோடி வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் 2.08 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. 28 ஆயிரத்து 179 கோடி ரூபாய் பயன்படுத்தவில்லை என்று மத்திய தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது.

பல்வேறு துறைகளிலும் ரூ.10 ஆயிரத்து 316 கோடி பயன்படுத்தாமல் அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மீதித் தொகை இன்னும் திரும்ப அரசிடம் ஒப்படைக்கவில்லை என்றும் மத்திய தணிக்கைக் குழு அறிக்கை தெரிவிக்கின்றது. மிக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை பயன்படுத்தாதது, அரசின் நிர்வாக சீர்கேட்டையும், பொறுப்பற்ற தனத்தையும் வெளிபடுத்தியுள்ளது.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டப் பேரவைக் கூட்டத்தில் எவ்வித விவாதமும் இன்றி 110வது விதியை பயன்படுத்தி  32 துறைகளுக்கு ரூ.21 ஆயிரத்து 298 கோடிக்கான 175 அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். இவைகள் நிறைவேற்றப்படும் என்பதற்கான எவ்வித உத்தரவாதமும் இல்லை. மக்களை கவர வேண்டும் என்பதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு பொது மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். ஆக்கபூர்வமான முறையில் செயல்பட்டு மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வர வேண்டுமென தமிழ்நாடு அரசை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com