பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை: தமிழக எம்.பிக்களுக்கு வைரமுத்து வாழ்த்து 

நாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை என்று தமிழக எம்.பிக்களுக்கு கவிஞர்  வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 ஜூன் 2019, 1:35 pm

சென்னை: நாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை என்று தமிழக எம்.பிக்களுக்கு கவிஞர்  வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் அனைவரும் செவ்வாயன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்கள் அனைவரும் தமிழிலேயே தங்கள் பதவியேற்பு உறுதிமொழியை வாசித்தனர். பின்னர் 'தமிழ் வாழ்க' என்னும் கோஷத்தையும் எழுப்பினர்.  

இதன் காரணமாக 'தமிழ் வாழ்க' என்னும் ஹேஷ்டேக் சமூக வலைத்தளமான ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

இந்நிலையில் நாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை என்று தமிழக எம்.பிக்களுக்கு கவிஞர்  வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

நாடாளுமன்றத்தில் தமிழில்

உறுதிமொழி ஏற்ற

தங்கங்களை வாழ்த்துகிறேன்.

நாம் எந்த மொழியையும்

எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை.

சொந்த மொழியைக் காக்கப் பிறந்தவர்கள்.

பயணிப்போம் - மொழி காக்க;

தமிழையும் ஆட்சிமொழி ஆக்க.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.