தேர்தலின் போது மட்டுமே விவசாயிகளை நினைக்கும் காங்கிரஸ்: மோடி கடும் தாக்கு 

தேர்தல் காலத்தின் போது மட்டுமே காங்கிரசுக்கு விவசாயிகளைப் பற்றிய நினைவு வரும் என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தேர்தலின் போது மட்டுமே விவசாயிகளை நினைக்கும் காங்கிரஸ்: மோடி கடும் தாக்கு 

கன்னியாகுமரி: தேர்தல் காலத்தின் போது மட்டுமே காங்கிரசுக்கு விவசாயிகளைப் பற்றிய நினைவு வரும் என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கன்னியாகுமரியில் வெள்ளியன்று நடைபெற்ற விழாவில் சுமார் ரூ. 40 ஆயிரம் கோடியிலான பல்வேறு நலத்  திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.நலத்திட்டத் துவக்க விழாவுக்குப் பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை லீப் ஆண்டு  வருவது போல, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுவது போல, தேர்தல் காலத்தின் போது மட்டுமே காங்கிரசுக்கு விவசாயிகளைப் பற்றிய நினைவு வரும். பத்து ஆண்டுகளாக அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தின் மூலம் வரும் 10 ஆண்டுகளில் 2.5 லட்சம் கோடி செலவாகும்.

கிடைக்கும் அரிய வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்களுக்கு நனமை செய்ய வேண்டும் என்ற திருவள்ளுவரின் வார்த்தைக்கு ஏற்ப நாங்கள் செயல்பட்டு வருகிறோம். மக்களும் எங்களை விரும்புகிறார்கள். மக்களுக்குத் தேவை வளர்ச்சிதானே தவிர கொள்கை முடக்கம் அல்ல. 130 கோடி இந்தியர்கள் எங்களுடன் உள்ளார்கள். மக்களுக்காக இன்னும் பல் வேலைகளை நாங்கள் செய்வோம்.

நாட்டிலேயே முதன்முறையாக மீன்வளத்துறை என ஒன்றைத் தனியாக உருவாக்கியதே நாங்கள்தான். நாட்டிலேயே நீளமான கடற்கரையைக் கொண்டுள்ள தமிழகத்தில் மீனவர்கள் சிறப்பாக தொழில் செய்து வருகிறார்கள்.   அவர்களுக்கு உதவும் பொருட்டு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு என ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பூம்புகார் மீன்பிடி துறைமுகம் குறித்த  பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இருக்க கூடிய பல்வேறு துறைமுகங்களை வலுப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. சாகர் மாலா திட்டமும் அதற்காகவே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com