கன்னியாகுமரி: கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்கு வருகிற 12ந்தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. "பெண்களின் சபரிமலை" என்ற சிறப்பு பெயரில் அழைக்கப்படும் இந்த கோயில் திருவிழா ஞாயிறன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கோவிலின் மூலஸ்தானத்தில் இருந்து திருக்கொடி மேளதாளத்துடன் கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதன்பின் கொடியேற்றப்பட்டு வழக்கமான பூஜைகளும் நடந்தன.
இந்த நிகழ்வில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடை விழாவை முன்னிட்டு வரும் 12ந்தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட காணொலி: தெலங்கானா முதல்வா் ஆதரவு

பண முறைகேடு வழக்கு: ஐ-பேக் இயக்குநரை 10 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஏற்காடு தொகுதியில் 15 ஆண்டுகளாக நிறைவேறாத அரசு கல்லூரி கோரிக்கை

அல்-காய்தாவுடன் இணைந்து பயங்கரவாத தாக்குதல் சதி: 3 பயங்கரவாதிகளுக்கு ஆயுள் சிறை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


