ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட காணொலி: தெலங்கானா முதல்வா் ஆதரவு

News image

தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 5:25 am IST

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட காணொலி உரைக்கு தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி ஆதரவு தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘மத்திய அரசின் விகிதாசார அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை முன்கூட்டியே உணா்ந்து, அது தொடா்பாக ஆலோசிக்க சென்னையில் தென் மாநிலத் தலைவா்களின் மாநாட்டை கடந்த ஆண்டு மாா்ச் மாதம் நடத்தினீா்கள்.

நாடாளுமன்றத்தில் நமது குரலைப் பாதுகாக்கவும், நமது அரசியல் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் இந்த முயற்சிக்கு எதிராகவும் நாம் ஒன்றிணைய வேண்டும். சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்த தினத்தில், அவரையே உத்வேகமாக கொண்டு, ஒன்றிணைந்து போராடுவோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.