தமிழகத்தில் வறட்சி பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம்!

கடந்த 2018-ஆம் ஆண்டு போதிய அளவில் மழை பெய்யாததால் தமிழகத்தின் 24 மாவட்டங்களை நீரியல் வறட்சி மாவட்டங்களாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வறட்சி பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம்!
Updated on
1 min read


சென்னை: கடந்த 2018-ஆம் ஆண்டு போதிய அளவில் மழை பெய்யாததால் தமிழகத்தின் 24 மாவட்டங்களை நீரியல் வறட்சி மாவட்டங்களாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இன்னும் சில நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இது தொடர்பாக, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: 

தமிழகத்தில் 2018-ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவ காலத்தில் பெய்த மழையளவு பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதில் கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 38 வட்டாரங்கள் பற்றாக்குறை மற்றும் மிகப் பற்றாக்குறை என்ற அளவில் மழைப் பொழிவைப் பெற்றுள்ளன.  அங்கு நிலத்தடி நீர் குறைந்திருப்பதால் கோடை காலத்தில் நீரியல் வறட்சி ஏற்படும். எனவே இந்த வட்டாரங்கள் நீரியல் வறட்சி வட்டாரங்களாக அறிவிக்கப்படுகின்றன.

அதுபோல மழைப்பொழிவை குறைவாகப் பெற்றுள்ள சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருவள்ளூர், நாமக்கல், விருதுநகர், காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், நாகப்பட்டினம், கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் நீரியல் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படுகின்றன என அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் ஏற்கனவே வறண்டு போய்விட்ட நிலையில் விரைவில் சென்னையை மிக மோசமான குடிநீர் பஞ்சம் விரட்டும் நிலையும் ஏற்படலாம்.

இதில்லாமல் திருநெல்வேலி, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளும் நீரியல் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் சந்திந்திருக்கும் மிக மோசமான வறட்சி நிலைக்கு பருவ மழையின் பங்கு மிக முக்கியமானதாக விளங்குகிறது.

பொதுவாக பருவ மழை காலத்தில் ஆண்டுக்கு தமிழகத்தில் 920.9 மி.மீ. மழை பெய்வது வழக்கம். அதாவது குளிர் காலத்தில் 3% மழையும், கோடைக்காலத்தில் 14% மழையும், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் 35% மற்றும் 48% மழையும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com