இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படாது; வழக்கம் போல டான்செட் நடத்தப்படும்: சூரப்பா அறிவிப்பு

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பழையபடி தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை (டான்செட்) அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்று துணைவேந்தர் சூரப்பா தெரிவித்தார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:48 am

DIN


எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பழையபடி தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை (டான்செட்) அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்று துணைவேந்தர் சூரப்பா தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சூரப்பா, முதுநிலை பொறியியல் படிப்புக்கான TANCET நுழைவுத்  தேர்வை அண்ணா பல்கலையே நடத்தும் என்றும், AUCET என்று தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படாது என்றும் அறிவித்தார்.

டான்செட் மட்டும் எழுதி எம்இ, எம்டெக் போன்ற உயர் படிப்புகளில் மாணவர்கள் சேரலாம், கடந்த ஆண்டப் போலவே இந்த ஆண்டும் டான்செட் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும். டான்செட் நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே எம்பிஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் தேர்வுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும், டான்செட்டுக்கு பதிலாக புதிய நுழைவுத் தேர்வு நடத்துவதாக இருந்த முடிவை திரும்பப் பெறுவதாகவும் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா தலைமையில் இன்று காலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக, உயர் கல்வித் துறை அதிகாரிகளின் கார்களுக்கு பெட்ரோல் நிரப்பப்பட்டு வந்த நடைமுறையை நிறுத்தியது, பணியாளர் நியமனத்தில் அரசியல் தலையீட்டை நிறுத்தியது போன்ற அதிரடி நடவடிக்கைகளை பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா எடுத்தார்.

இதன் காரணமாக, அவருக்கும் தமிழக உயர் கல்வித் துறைக்கும் மோதல் போக்கு மூண்டது. அதன் ஒரு பகுதியாக, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் குழுவில் இணை தலைவராக தொழில்நுட்ப கல்வி இயக்குநரை தமிழக அரசு நியமித்தது. இதனால் அந்தக் குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து துணைவேந்தர் சூரப்பா விலகினார். இதன் காரணமாக, 2019 - 20ஆம் ஆண்டு பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பதிலாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகமே நடத்துகிறது.

பல்கலைக்கழகத்தின் நிதி நிலையை உயர்த்துவதற்காக, ஒருசில கட்டணங்களை உயர்த்த பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதற்கு அனுமதி மறுத்து, கட்டண உயர்வுக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டது.

இந்த தொடர் மோதல் போக்கு காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என 9 கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற படிப்புகளுக்கு தனியாக அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வை (ஏயுசெட்) அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்தது. இதற்கு மே 6 முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதுவரை தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலைஅறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு டான்செட் என்ற ஒரே நுழைவுத் தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏயுசெட் அறிவிப்பால், இந்தப் படிப்புகளுக்கு இரண்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் நிலை உருவானது.

இந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,  எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும், அதனை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்றும் தமிழக உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. 

மேலும் இந்தத் தேர்வை நடத்தும் குழுவில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், கல்லூரி கல்வி இயக்குநர் ஆகியோர் இடம் பெற்றிருப்பதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வை நடத்துவது என அண்ணா பல்கலைக்கழகமும் முடிவு செய்தது. இதற்காக துணைவேந்தர் சூரப்பா தலைமையில் இன்று காலை பல்கலைக்கழகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சூரப்பர், கடந்த ஆண்டப் போலவே இந்த ஆண்டும் டான்செட் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்று அறிவித்தார்.

இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் ஏயுசெட் தேர்வை அறிவித்ததால், அதை ரத்து செய்வதற்கு திருத்தம் ஒன்றும் வெளியிடப்படும். இதன் மூலம் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வாக மீண்டும் டான்செட் தேர்வே நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.