கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நதிகள் இணைப்புத் திட்டம்: நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் நன்றி

கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு உறுதியளித்திருக்கும் நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :27 மே 2019, 3:03 am IST

கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு உறுதியளித்திருக்கும் நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.  
16-ஆவது மக்களவையில் மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் நீர் வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் நிதின் கட்கரி. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 
இந்த நிலையில், நதிநீர் இணைப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிட்ட நிதின் கட்கரி, தமிழகம் எங்களைப் புறக்கணித்தாலும் நாங்கள் அந்த மாநிலத்துக்கான திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றுவோம். அதன்படி கோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்டமே எங்களின் முதல் பணியாக இருக்கும் என உறுதியளித்தார்.
இந்த இரு நதிகள் இணைப்பு மூலம், அவற்றின் உபரி நீர் பெண்ணாறு மூலம் காவிரியில் திருப்பிவிடப்படும். அதன் மூலம் தமிழகத்துக்கு அதிக தண்ணீர் கிடைக்கும். நிதின் கட்கரியின் இந்த அறிவிப்புக்கு, முதல்வர்  எடப்பாடி கே.பழனிசாமி தனது சுட்டுரைப் பதிவில் நன்றி தெரிவித்துள்ளார். அதில், கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பால் தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறை தீரும். இக்கட்டான சூழலில் இந்தத் திட்டம் தமிழகத்துக்கு அவசியம் தேவை. கோதாவரி - கிருஷ்ணா நதி - பெண்ணாறு - காவிரி நதி ஆகியவற்றின் இணைப்பின் மூலம் தமிழகத்தின் தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என உறுதியளித்திருக்கும் நிதின் கட்கரிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நதிநீர் இணைப்பு தமிழகத்தின் நீண்ட கால விருப்பம் என தனது சுட்டுரைப் பதிவில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.